Yes Bank வங்கியில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி பிரச்சனைக்கும் பணத்தை திருப்பி எடுக்க வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கும் பொருளாதார மந்த நிலையோடு தொடர்பு படுத்தியும் வங்கியின் பிரச்சனைக்கும் மத்திய அரசுதான் காரணம் என்று பலர் சம்மந்தப்படுத்தி பேச ஆரம்பித்துவிட்டனர். இதுபோன்ற வதந்திகளை முறியடிக்கவே இந்த பதிவு.
முதலில் Yes Bank என்பது பொதுத்துறை வங்கி அல்ல. அது ஒரு தனியார் வங்கி. எனவே அதில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கும் அரசுக்கும் எந்த வகையில் தொடர்பு என்பது தெரியவில்லை.
இரண்டாவது Yes Bank வங்கியின் இந்த நிதி நெருக்கடிக்கு என்ன காரணம்?வாராக்கடன்.வாராக்கடன் ஏன் ஏற்பட்டது?தகுதியற்ற நிருவனங்களுக்கு எந்த விதமான விதிமுறைகளையும் பின்பற்றாமல் கடன் பெறும் நிறுவனங்களின் நிதிநிலை என்ன என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்யாமல் தன் இஷ்டத்துக்கு பொதுமக்கள் பணத்தை எடுத்து பல்வேறு நிறுவனங்களுக்கு சுமார் 14000 கோடி ரூபாய் கடனை கொடுத்துள்ளது.
சுமார் ரூ.14000 கோடி ரூபாய் கடன் பெற்ற நிருவங்கள் கடனை வங்கிக்கு மீண்டும் திருப்பி செலுத்தாததால் வங்கியின் வாராக்கடன் அதிகரித்தது.
சரி Yes Bank கடன் கொடுத்த பெறு நிறுவனங்கள் யார்?
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம்,வோடஃபோன் நிறுவனம்,Vessel,DHFL,ILFS உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு இந்தக் கடனை வங்கி வழங்கியுள்ளது.இந்த நிறுவனங்கள் எல்லாமே கடந்த 2 ஆண்டுகளாக நெருக்கடியில் உள்ள நிறுவனங்கள். இவர்களுக்கு கடன் கொடுப்பதற்கு முன்னதாக அவர்களின் நிதிநிலை மற்றும் கடனை திருப்பி செலுத்த முடியுமா என்பது பற்றி யோசித்து வங்கி கடன் வழங்கியிருக்க வேண்டும்.ஆனால் அதனை செய்யவில்லை.
தற்போது பிரச்சனை முற்றியுள்ள நிலையில் மேற்கொண்டு பிரச்சனை அதிகரிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்கியில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான வரம்பை ரூ.50000 என்று நிர்ணயித்துள்ளது ரிசர்வ் வங்கி.இது கட்டுப்பாடுதானே அன்றி இதனால் வங்கியில் டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளரின் பணத்துக்கோ அல்லது பணம் திரும்ப கிடைப்பதற்கோ எந்த பிரச்சனையும் இல்லை.
வங்கியில் பணமே இல்லை என்றாலும் ரிசர்வ் வங்கி வாடிக்கையாளருக்கு அந்த பணத்தை வழங்கும்.ரிசர்வ் வங்கி எப்படி வழங்கும்?
வங்கிகளுக்கு இது போன்ற சூழ்நிலை சில நேரங்களில் ஏற்படும்.அப்போது வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வங்கிகள் துவங்கும்போது சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை ரிசர்வ் வங்கியில் செலுத்த வேண்டும்.வங்கி திவால்,நொடிப்பு நிலை போன்ற சூழல் ஏற்படும்போது ஏற்கனவே வங்கிகள் ரிசர்வ் வங்கியில் செபாசிட் செய்துள்ள பணத்தில் இருந்து வாடிக்கையாளருக்கு வழங்கும்.எனவே வாடிக்கையாளர்களின் பணத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
இருப்பினும் நாட்டின் மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி Yes Bank வங்கியில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி Yes Bank ன் 49% பங்கை வாங்க போவதாக கூறியுள்ளது. இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நேற்று கூறியபடி இன்னும் 1 மாதத்தில் இந்த Yes Bank குழப்பத்தை நீக்க முடியும் என்ற அவர்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதி படுத்துகிறது.
- Arun Ramesh

தொடர்ந்து தமிழ் கட்டுரைகள் அதிகமாக பதிவிடவும் அண்ணா
ReplyDelete