Yes Bank வங்கியில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி பிரச்சனைக்கும் பணத்தை திருப்பி எடுக்க வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கும் பொருளாதார மந்த நிலையோடு தொடர்பு படுத்தியும் வங்கியின் பிரச்சனைக்கும் மத்திய அரசுதான் காரணம் என்று பலர் சம்மந்தப்படுத்தி பேச ஆரம்பித்துவிட்டனர். இதுபோன்ற வதந்திகளை முறியடிக்கவே இந்த பதிவு. முதலில் Yes Bank என்பது பொதுத்துறை வங்கி அல்ல. அது ஒரு தனியார் வங்கி. எனவே அதில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கும் அரசுக்கும் எந்த வகையில் தொடர்பு என்பது தெரியவில்லை. இரண்டாவது Yes Bank வங்கியின் இந்த நிதி நெருக்கடிக்கு என்ன காரணம்?வாராக்கடன்.வாராக்கடன் ஏன் ஏற்பட்டது?தகுதியற்ற நிருவனங்களுக்கு எந்த விதமான விதிமுறைகளையும் பின்பற்றாமல் கடன் பெறும் நிறுவனங்களின் நிதிநிலை என்ன என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்யாமல் தன் இஷ்டத்துக்கு பொதுமக்கள் பணத்தை எடுத்து பல்வேறு நிறுவனங்களுக்கு சுமார் 14000 கோடி ரூபாய் கடனை கொடுத்துள்ளது. சுமார் ரூ.14000 கோடி ரூபாய் கடன் பெற்ற நிருவங்கள் கடனை வங்கிக்கு மீண்டும் திருப்பி செலுத்தாததால் வங்கியின் வாராக்கடன் அதிகரித்தது. சரி Ye...